UAE Tamil Web

மனுஷனுக்கு தில்ல பாத்தியா – போலீஸ்காரரின் டிரைவிங் லைசன்சை 5 ஆண்டுகள் சட்டவிரோதமாக பயன்படுத்தியவருக்கு சிறை!

துபாய் காவல்துறையில் பணியாற்றி வந்த 25 வயது காவலர் ஒருவர் தனது பர்சை கடந்த 2016ம் ஆண்டு தொலைத்துள்ளார். அதில் அவரது டிரைவிங் லைசன்ஸ், எமிரேட்ஸ் ஐடி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன. இதனை கண்டெடுத்த 43 வயது நபர், காவல்துறையிடம் ஒப்படைக்காமல் சுருட்டியுள்ளார். இந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அண்மையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக போலீசார் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் வாகனத்தில் மது கடத்தியது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த லைசன்ஸ் ஒரு போலீஸ் அதிகாரியுடையது என்பதும் அம்பலமானது.

All 139 UAE traffic violations, fines and black points | Legal – Gulf News
(File)

முறைகேடாக ஒருவரின் அடையாளத்தை பயன்படுத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதற்காக அந்த நபரை துபாய் காவல்துறை கைது செய்தது. போலீஸ் அதிகாரியின் லைசன்சையே 5 ஆண்டுகள் பயன்படுத்தி ஒருவர் ஏமாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Share
Share via
Copy link