ஷார்ஜாவின் கடல் பகுதியில் கடல் பாம்பு கணிசமான அளவில் காணப்படுகிறது. இவை சாதாரணமாக அமைதியானவை என்றாலும் ஆபத்து சூழ்நிலையில் மனிதர்களை தாக்கும் இயல்பு கொண்டது.
இதனால் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆணையம் கடல் பாம்பைப் பார்த்து மக்கள் பயம்கொள்ளத் தேவையில்லை எனவும் அதற்கு தீங்கு இழைக்காதவாறு நடந்துகொள்ளவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
பொது இடங்களில் பாம்பு தென்பட்டால் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான ஆணையத்திடம் மக்கள் தகவல் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
வன விலங்குகள் மற்றும் ஊர்வன நிபுணர்கள் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பான இடங்களில் கொண்டுபோய் விடுவார்கள். தேவை ஏற்படின் பாம்புகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுவருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, அடுத்தமுறை கடல் பாம்பைப் பார்த்தால் வழிவிட்டுச் சென்றுவிடுங்கள். ஒருவேளை பாம்பினை சிலர் தாக்குவதைக் கண்டால் உடனடியாக ஆணையத்தினை தொடர்புகொள்ளவும்.
