அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘மர்ஸா மினா வாட்டர்ஃபிரன்ட்’ பொழுதுபோக்கு தலம்.!

Marsa_Mina-696x464

அபுதாபியில் பொதுமக்களுக்காக ஒரு புதிய பொழுதுபோக்கு ஈர்ப்பு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

மர்ஸா மினா என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்த பொழுதுபோக்கு அம்சமானது மினா சயீத்தில் அமைந்துள்ளது. அபுதாபிக்கு கடல் வழியாக செல்லும்போது பல சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் முதல் இடமாக இந்த புதிய மைல்கல் இருக்கும்.

க்ரூஸ் ஷிப்-களில் நகரத்திற்கு வரும் சர்வதேச பயணிகளையும், ஆராய்வதற்கு புதிய இடத்தைத் தேடும் குடியிருப்பாளர்களையும் மகிழ்விப்பதற்காக இந்த புதிய ஈர்ப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுள் ஏராளமான கடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதுகுறித்து கேப்டன் முகமது ஜுமா அல் ஷமிசி, அபுதாபி போர்ட்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் “குரூஸ் வழியாக அபுதாபிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மர்ஸா மினா ஒரு கூடுதல் உற்சாகமாகும். அத்துடன் சயீத் துறைமுகத்தை ஒரு தனித்துவமான ஓய்வு இடமாக அமீரக மக்களுக்கும் கப்பல் பயணிகளுக்கும் காட்டுவதற்கான எங்களின் உறுதிப்பாட்டை இந்த புது தளம் குறிக்கிறது” என்றார்.

Loading...