UAE Tamil Web

துபாய் EXPO-வில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.. ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

அமீரகத்தில் கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமீரக அரசு பிப்ரவரி 15 முதல் படிப்படியாக நீக்கி வருகிறது.

கோவிட்-19 தொற்று நோய்காக விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடான முகக்கவசம் அணிவதை அமீரகம் முழுவதும் தளர்த்தியுள்ள நிலையில், தற்போது துபாய் EXPO 2020 கண்காட்சியின் வெளிப்பகுதியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிப்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், அதிகளவில் மக்கள் திறலும் இடத்தில் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.

துபாய் EXPO 2020-இல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பார்வையாளர்களும் தடுப்பூசி செலுத்திய ஆதாரம் அல்லது 72 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் PCR பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழின் ஆதாரத்தை காட்ட வேண்டும். இருப்பினும் EXPO பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் EXPO-வின் உள்புறப் பகுதியில் முகக்கவசம் அணிந்துக் கொள்ளலாம். மேலும் அங்கு ஒவ்வொரு நாட்டு அரங்கிலும் ஊழியர்களுக்கான PCR சோதனை வசதிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 Share
Share via
Copy link