துபாய் அல் பர்ஷா பகுதி 1 இல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை 14 நிமிடங்களில் துபாய் சிவில் டிஃபென்ஸ் துறை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
துபாய் அல் பர்ஷாவில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கடும் புகையுடன் காட்சியளித்துள்ளது.
இந்த விபத்தில் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என்று துபாய் சிவில் டிஃபென்ஸ் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து துபாய் சிவில் டிஃபென்ஸ் குழு வெளியிட்ட அறிக்கையில், “துபாய் தற்காப்பு அறைக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:24 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அல் பர்ஷா நிலையத்திலிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், கட்டிடத்திலிருந்த மக்களை வெளியேற்றி 14 நிமிடங்களில் தீயை அணைத்தனர். இதனால் கட்டிடத்தின் வெளிப்புற பகுதியிகள் சேதமடைந்துள்ளது. தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணைகள் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ பற்றிய காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.