துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் ஈத் விடுமுறைக்கு செல்லத் தொடங்குவதால் பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.!

Massive rush at Dubai International Airport as residents start leaving for Eid holidays

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் குடியிருப்பாளர்கள் ஈத் விடுமுறைக்கு செல்லத் தொடங்குவதால் பெரும் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

விமான நிலைய சாலையில் அதிக போக்குவரத்து இருப்பதால் பயணிகளை முன்கூட்டியே பயணிக்க தொடங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

ஈத் அல் ஆதாவை முன்னிட்டு ஐந்து நாள் வார விடுமுறை வருவதால் கூட்டநெரிசலின் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று துபாய் காவல்துறை வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.

துபாய் இன்டர்நேஷனலின் டெர்மினல் 1 மற்றும் 3 நோக்கி செல்லும் விமான நிலைய சாலை நெரிசலாக உள்ளது, என்று காவல்துறையினர் காலையில் ட்வீட் செய்தனர். மேலும், மாற்று வழிகளை எடுக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டனர்.

துபாய் இன்டர்நேஷனல் பயணிகளுக்கு விடுமுறை என்பதால் சுமார் 100,000 பேர் டெர்மினல் 3 வழியாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) அன்று மட்டும் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது பயணிகளை விமானம் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளது.

துபாயிலிருந்து புறப்படுபவர்களுக்கு விமான நிலையம் வழியாக வெளியேற அதிக நேரம் தேவைப்படுவதால் விமான நிலையத்தின் வழியாக செல்ல கூடுதல் நேரம் அனுமதிக்குமாறு வியாழக்கிழமை அன்று எமிரேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

ஈத் அல் ஆதா சனிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை முடிவடைவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்கள் அடுத்த சில நாட்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்படுள்ளது.