UAE Tamil Web

வரலாற்றில் முதன்முறையாக அமீரகத்தில் பிறந்த இஸ்ரேலியக் குழந்தை..!

Mia_

அமீரகத்தின் வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரேலிய குழந்தை ஒன்று துபாயில் பிறந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. நேற்று (ஆகஸ்டு 14) இரவு 2 மணிக்கு துபாயில் உள்ள மெடிகிளினிக் மருத்துவமனையில் மியா ஸ்டுல்மென் ஸ்டாரோஸ்டா (Mia Sztulman Starosta) பிறந்திருக்கிறாள்.

மியாவின் தந்தை இலான் ஸ்டுல்மென் ஸ்டாரோஸ்டா லெம்பேர்ட் (Ilan Sztulman Starosta Lembert) துபாயில் உள்ள இஸ்ரேலிய துணைத் தூதரக தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்துப் பேசிய அவர்,” அமீரகத்தில் எனது சேவையைத் துவங்கும் நேரத்தில் மகள் பிறந்திருக்கிறாள். இந்த வரலாற்றுத் தருணத்தில் நானும் இணைந்திருக்கிறேன். என்னுடைய மனைவி ஜாக்குலின் ஸ்டாரோஸ்டா லெம்பேர்ட் இஸ்ரேலிய துணைத் தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்” என்றார்.

அமீரகத்தின் மண்ணில் பிறந்த இஸ்ரேலியக் குழந்தை மியாவை பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Mia_
1 Share
Share via
Copy link