துபாயில் சமீபத்தில் நடைபெற்ற எமிரேட்ஸ் டிராவில், இந்தியர் ஒருவர் 77,777 திர்ஹம்ஸை பரிசாக வென்று அசத்தியுள்ளார்.
எமிரேட்ஸ் டிராவில் 77,777 திர்ஹம்ஸ்-ஐ இந்தியாவைச் சேர்ந்த பிரபானந்த் பாலசுப்ரமணியன் என்பவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
அதே சமயத்தில் மேலும் எட்டு பங்கேற்பாளர்களில் ஒவ்வொருவரும் 7,777 திர்ஹம்ஸ் வென்றனர் மற்றும் 63 பங்கேற்பாளர்கள் தலா 777 திர்ஹம்ஸ் வென்றனர். இறுதியாக 556 பங்கேற்பாளர்களில் இருவர் 77 திர்ஹம்ஸ் வென்றனர்.
17,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துக்கொண்ட இப்போட்டியில் 23 மில்லியன் திர்ஹம்ஸிலிருந்து பல்வேறு தொகைகள் வழக்கப்பட்டது.
இதில் வெற்ற பெற்ற நபர்களில் ஒருவர் மட்டும் எமிரேட்ஸ் டிரா குழுவால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகப்பெரிய 100 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசுக்கு தேர்வு செய்யப்படுவார்.
அந்த மெகா 100 திர்ஹம்ஸ் மில்லியன் கிராண்ட் டிரா ஏப்ரல் 24 அன்று இரவு 9 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.