UAE Tamil Web

தமிழகத்தில் LULU MALL அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு.. காரணம் என்ன..?

லுலு வணிக வளாகம் அமைக்கும் ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றார். அப்போது லுலு குழுமம் 3500 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது.

தமிழகத்தில் லுலு பிரமாண்டமான ‘ஷாப்பிங் மால்’ அமைக்க உள்ளது. இது தமிழக வணிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர், முதல்வர் ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் எடுப்பதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் தமிழக பொருளாதாரத்தின் ஆணிவேராக திகழும் பெரிய தொழில்கள், சிறு தொழில்கள், மொத்த வணிகம், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு உள்ளோரின் வாழ்வாதாரம், தற்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசு ‘வால்மார்ட்’ நிறுவனத்திற்கு அனுமதி அளித்த போது வணிக சங்கங்கள் போராட்டம் நடத்தியதால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அது போன்று லுலு மார்க்கெட் பல மடங்கு பெரியதாக வரும் போது சில்லரை வணிகம் முற்றிலுமாக அழிக்கப்படும்.

எனவே முதல்வர் முக்கியமான வணிக சங்கங்களை அழைத்துப்பேசி தாங்கள் ஒப்பந்தம் செய்ததை மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

 

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap