துபாய் மெட்ரோ ரயில் தாமதம் – பயணிகள் கடும் அவதி.!

Rashidiya மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து UAE எக்ஸ்சேஞ்ச் செல்லும் மெட்ரோ ரயில் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதி.

மெட்ரோ இரயில் தாமதமாக சென்றதால் பயணிகள் சமூக வலைதளங்களில் அவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்விட்டர் பக்கத்தில் இதை பற்றி பயணி ஒருவர் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து, அந்த பதிவிற்கு மற்ற பயணிகளும் மறுமொழி கூறியிருந்தனர். அதில் ஒரு பயணி கூறியதாவது; ‘இரயில் கதவுகள் மூடப்பட்டு 15 நிமிடத்திற்கு மேல் இரயில் நகரவில்லை’ என்று கவலை தெரிவித்து இருந்தார்.

இந்த சம்பவம் சமூக வலைதள பக்கங்களில் பலரால் பேசப்பட்டு வருகிறது.

Source: Khaleej Times