UAE Tamil Web

கொளுத்தும் வெயில்: அமீரகத்தில் மதிய ஓய்வு இடைவேளையை அறிவித்தது அரசு..!

worker

தொடங்கியிருக்கும் கோடைக்காலத்தில் இருந்து தொழிலாளர்களைக் காக்கும்பொருட்டு மதிய நேர ஓய்வு இடைவேளையை அமீரக மனிதவள மற்றும் எமிராட்டிசெஷன் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

இதன்மூலம் ஜூன் 15 ஆம் தேதிமுதல், மதியம் 12.30 மணிமுதல் 3 மணிவரையில் பணியாளர்களுக்கு ஓய்வு அளிக்கவேண்டும். செப்டம்பர் 15 ஆம் தேதிவரையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களில் அமீரகத்தில் 47 – 49 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தியிருக்கிறது. கட்டிட வேலை செய்பவர்கள் போன்ற பணியாளர்களைக் காக்கும் வகையில் இந்தத் திட்டத்தை அமீரக அரசு வருடந்தோறும் செயல்படுத்திவருகிறது.

worker
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap