UAE Tamil Web

அமீரகத்தில் லேசாக உணரப்பட்ட நிலநடுக்கம்.. மக்கள் பீதியடைய வேண்டாம் – ஆய்வு மையம் தகவல்

அமீரகத்தில் இன்று ஜூன் 18, சனிக்கிழமையன்று ரிக்டர் அளவுகோலில் 2.4 என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அளித்த தகவலின்படி, இந்த நிலநடுக்கம் மதியம் 3.27 மணியளவில் Albataehல் பதிவாகியுள்ளது.

அமீரகத்தில் ஒரு வருடத்தில் பல முறை சிறிய அளவிலான நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது, ஆனால் அவை நாம் கவலைப்படும் அளவிலான பெரிய பிரச்சனை இல்லை என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

முன்னதாக ஊடகங்களிடம் பேசிய நிலநடுக்கவியல் நிபுணர், அமீரகத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் கவலைப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனில் இதுபோன்ற சிறிய அளவிலான நிலநடுக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.

“கடந்த 10 ஆண்டுகளாக திப்பா, மசாஃபி, கோர் ஃபக்கான் நகரம், ஃபுஜைரா நகருக்கு எதிரே உள்ள ஓமன் கடல் மற்றும் கல்பா ஆகிய இடங்களில் நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன என்று அவர் கூறினார். ஆகவே மக்கள் இந்த அதிர்வை கண்டு பீதியடைய வேண்டாம் என்றும் கூறினார்.

“வழக்கமாக அமீரகத்தை தாக்கும் நிலநடுக்கம், ஒப்பீட்டளவில் சிறியது மற்றும் 2 முதல் 5 ரிக்ட்டர் வரையிலான அளவில் மட்டுமே ஏற்படுகின்றது. இவை பெரிய விளைவை ஏற்படுத்தாது என்றார் அவர்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap