UAE Tamil Web

வண்ணமயமான பூக்களால் பூத்து குலுங்கும் நகரம்.! கண்களுக்கு விருந்தளிக்கும் துபாய்.. (வீடியோ)

flowers

அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக வானுயர்ந்த கட்டிடங்களை கொண்டிருக்கும் துபாய் நகர வீதிகளை வண்ணமயமான பூக்களால் மேலும் அலங்கரித்துள்ளது துபாய் நகராட்சி. இதனால் துபாய் நகரம் முழுவதும் மில்லியன் கணக்கான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நகரிலுள்ள முக்கிய அடையாளங்களையும், பொது இடங்களையும் மேலும் ரம்மியமாகியுள்ளன லட்சக்கணக்கான பூக்கள்.

1

நகரின் இயற்கை அழகை பேணிக்காக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையால் துபாய் குடியிருப்பாளர்களும், பார்வையாளர்களும் நடைபயிற்சி செய்தாலும் சரி அல்லது வாகனம் ஓட்டினாலும் சரி அவர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும் முழுக்க வண்ணமயமான ஒரு மலர் விருந்து படைக்கப்பட்டுள்ளது.

2

நகரிலுள்ள பூங்காக்கள் மற்றும் ரவுண்டானாக்கள் என எங்கு பார்த்தாலுமே நம்மை அசர வைக்கும் வகையில் மில்லியன் கணக்கான பூக்கள் பூத்துள்ளன. இது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள துபாய் நகராட்சி, கடந்த ஆண்டு சுமார் 57 மில்லியன் மலர்களால் துபாயை அலங்கரித்ததாக குறிப்பிட்டுள்ளது. மொத்தத்தில், 1.7 மில்லியன் சதுர அடி அளவிலான பொது இடங்களில் வண்ணமயமான பூக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் அந்த பதிவில், துபாயின் பொது இடங்களில், குறிப்பாக சாலைத் தடைகள் மற்றும் பொது பூங்காக்களுக்குள் பசுமையான பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் வேளாண் துறையில் உள்ள சிறந்த சர்வதேச நடைமுறைகளைப் பயன்படுத்தி இந்த பகுதிகளை அதிகரித்து, தொடர்ந்து அபிவிருத்தி செய்து மேற்பார்வையிடுவதாகவும் துபாய் நகராட்சி குறிப்பிட்டுள்ளது

முன்னதாக, 177 பகுதிகளில் 10,000 அல் காஃப்(Al Ghaf) மரங்கள் நடப்பட்டுள்ளதாக துபாய் நகராட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

flowers
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap