UAE Tamil Web

துபாய் EXPO-வில் நடிகர் ரன்வீர் சிங்குடன் நடனமாடிய அமைச்சர் அனுராக் தாக்கூர்

துபாய் EXPO 2020 கண்காட்சியில் இந்திய அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், நடிகர் ரன்வீர் சிங்குடன் நடனமாடினார்.

துபாய் EXPO 2020 கண்காட்சியில் இந்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பங்கேற்றார்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து  2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்தில் இருந்து மல்ஹாரி என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது. அப்போது நடனமாடிய ரன்வீர் சிங்கின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் அனுராக் தாக்கூரும் நடனமாடினார். அதனை கண்ட பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். நடனமாடிய வீடியோவை அனுராக் தாக்கூர் டிவிட்டரில் பதிவிட்டும் உள்ளார்.

துபாய் EXPO இடம்பெற்ற இந்திய அரங்கை இதுவரை 17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap