39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

கொரோனா வைரஸினால் அமீரகத்திற்கு பாதிப்பா.? – சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் விளக்கம்.!

coronavirus

கொரோனா வைரஸ்கள் (Coronavirus) என்பது பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் நோய்களை ஏற்படுத்தும் ஒரு வகையான மர்மமான வைரசாகும். அவை பசுக்கள் மற்றும் பன்றிகளுக்கு வயிற்றுப்போக்கு, கோழிகளுக்கு மேல் சுவாச நோய் ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு லேசான சுவாச தொற்றுநோய் (In rare cases) ஏற்படவும் சில சமயம் காரணமாகுகின்றன. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அல்லது சிகிச்சை மேற்கொள்வதற்கு, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை என்பது தான் மிகவும் கவலைக்குரிய உண்மையாகும்.

தற்போது சீனாவிலிருந்து வெளிவரும் இந்த மர்ம வைரஸிலிருந்து (கொரோனா வைரஸ்) ஐக்கிய அரபு அமீரகம் முற்றிலும் விடுபட்டுள்ளது மற்றும் பாதுகாப்பானது என்பதை அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (The Ministry of Health and Prevention (MOHAP), UAE) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் மற்றும் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியக் குழு (The National Committee for International Health Regulations and the Control of Pandemics) இது குறித்து கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பயனுள்ள ஒருங்கிணைந்த அமைப்பையும், பொது சுகாதார அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கான அவசர மற்றும் நெருக்கடிக்கான திட்டங்களை கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய புதுப்பிப்புகள், பரிந்துரைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி உடனுக்குடன் தகவல்களை கண்டறிவதற்கு, உலக சுகாதார அமைப்புடன் (WHO), அமீரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றது” என்கிறது.

MOHAP அமைச்சகத் தலைமையில் கடந்த புதன்கிழமை (January 22 2020) நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் குழு, கீழ் குறிப்பிட்டுள்ள முக்கிய பங்காளிகளின் முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

  • துபாய் சுகாதார ஆணையம் (DHA)
  • சுகாதாரத் துறை – அபுதாபி
  • தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம்
  • விமான நிலையங்கள், துறைமுகங்கள், எல்லைகள் மற்றும் இலவச மண்டல பாதுகாப்பு மற்றும் பிற அமைப்புகள்.

இறுதியாக தேசியக் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில் ,”இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்த நடவடிக்கைகள் கொரோனா வைரஸிலிருந்து நாட்டைப் பாதுகாக்க முற்றிலும் போதுமானவையாகும். மேலும் உலகெங்கிலும் கண்டறியப்பட்ட வெவ்வேறு வைரஸ்கள் குறித்த வழக்குகள் மற்றும் மற்ற வகை தொற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது, இந்த கொரோனா வைரஸ் இன்னும் பரவலாகவே உள்ளன என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க தேசியக் குழு விரும்புகின்றது. ஆகவே சுகாதார நிலைமை குறித்து கவலைகொள்ள எந்த அடிப்படையும் இல்லை. அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக MOHAP அமைச்சகம், நாட்டின் நிலைமையை நெருக்கமாக பின்பற்றுகிறது என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைதவிர்த்து அமீரகத்தில் சிறந்த உலகளாவிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், எந்தவொரு தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் நுழைவு புள்ளிகளில் (UAE’s entry points) பயன்படுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் வேறு நாட்டிலிருந்து அமீரகத்திற்கு வரும் மக்களுக்கு, இந்த வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெவ்வேறு மொழிகளில் வெளியிடவும் MOHAP அமைச்சக குழு ஒப்புக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!