அமீரகத்தில் வானிலை மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பயணிக்குமாறு உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அமீரகத்தில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தால் நல்ல மழை பெய்து வருகிறது. பள்ளத்தாக்கு பகுதகளிலிருந்து நீர் வரத்து அதிகமாக வருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
இந்நிலையில் ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெபல் ஜெய்ஸ் மலையிலிருந்து வரும் நீர்வீழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வியாழக்கிழமை மழை பெய்த நிலையில் திங்களான இன்று அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான் மற்றும் ராசல் கைமாவின் சில பகுதிகளில் மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
அஜ்மானில் தற்போது கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுதிறது.
حالياً منطقة الجرف #عجمان #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #إبراهيم_الجروان pic.twitter.com/wDkL6pJ4OB
— المركز الوطني للأرصاد (@NCMS_media) January 3, 2022
மழையின் காரணமாக எக்ஸ்போ 2020, துபாயில் குளோபல் வில்லேஜ் மற்றும் கேம்பஸ் ஜெர்மனி பெவிலியன் உள்ளிட்ட முக்கிய பொழுதுபோக்கு இடங்கள் நேற்று மூடப்பட்டன. மோசமான வானிலை காரணமாக துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் ஃபயர்வொர்க்ஸும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த மழையை விட இந்த ஆண்டு மழை நன்றாக இருப்பதாகவும், புதன்கிழமைக்குள் மழை படிபடியாக குறையும் என்றும் தேசிய வானிலை ஆய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.