UAE Tamil Web

அமீரகத்தில் லேசான நிலநடுக்கம் – மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அறிவிப்பு!

அமீரகத்தின் தென்கிழக்கு பகுதியில் ஹஜர் மலை அருகே அமைந்துள்ள மசாஃபி எனும் கிராமத்தில் இன்று மாலை 3.02மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.2ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பெரிய அதிர்வுகள் ஏதும் ஏற்படவில்லை. தேசிய நில அதிர்வு மையமும் இந்த நிலநடுக்கத்தை உறுதி செய்துள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமீரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிது நேர இடைவெளியில் 3.10க்கு தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் ஹைதி நாட்டில் 7.2 ரிக்டர் அளவுகோலில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

4 Shares
Share via
Copy link