தேடப்பட்டு வந்த 15 வயது இந்திய சிறுவன் கண்டுபிடிப்பு – அஜ்மான் போலீஸ் அசத்தல்!

15-year-old Indian boy found in Ajman !

தேடப்பட்டு வந்த 15 வயது இந்திய சிறுவன் அஜ்மான் அருகே போலீஸார் கண்டுபிடித்து குடும்பத்துடன் சேர்த்தனர்.

ஜுலை 4 தேதி முகமது பர்வேஸ் என்ற இந்த சிறுவன் நள்ளிரவில் யூடியுப் சேனல் ஒன்றை பார்த்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்ததாகவும், இதனால் வீட்டை விட்டு வெளியேறிதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சார்ஜா போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது குறித்து அஜ்மான் போலீஸ் கூறுகையில் நாங்கள் பல நபர்களுடன் இந்த சிறுவனை சுற்றி வளைத்தோம், காணாமல் போன சிறுவனை அடையாளம் காண ஷார்ஜா போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் சிறுவனின் தந்தையை அடையாளம் காட்டுவதற்காக உடன் அழைத்து சென்றனர்.

பிறகு அவரது தந்தை அடையாளம் காட்டினார், உறுதி செய்த போலீஸார் சிறுவனை அழைத்து சென்றனர்.

பர்வேஸ் மீண்டும் மறுபிரவேசம் எடுத்ததைப்போல அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அவனை கண்டுப்பிடிக்க உதவியதாக கலீஜ் டைம்ஸ் தளத்திற்கு 5000 திரகம் பரிசாக அளித்தனர்.

வியாழக்கிழமை சிறுவனை தேடி அவரது மாமா வாழ்ந்த கல்பாவுக்கு சென்றனர். ஆனால் அங்கு கண்டுப்பிடிக்க முடியவில்லை. பிறகு ஷார்ஜா போலீசாரின் தகவலை அடுத்து சிறுவனின் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Loading...