ஷார்ஜாவில், இந்திய மாணவர் ஒருவர் வியாழக்கிழமை பிற்பகல் அவரது பெற்றோரால் காணாமல் போனதாகக் புகார் அளிக்கப்பட்ட பிறகு பத்திரமாக வீடு திரும்புள்ளார்.
ஷார்ஜாவில் உள்ள டெல்லி தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அனவ் சேத், ஷார்ஜாவின் அல் தாவுன் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு வெளியேறினார். இதனை அடுத்து நேற்று இரவு அவரது பெற்றோர்கள் தங்களது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளித்தனர். புகாருக்கு பின் சில மணி நேரங்களில் அனவ் சேத் வீடு திரும்பனார்.
இது குறித்து சிறுவனின் தந்தை மோஹித் சேத் கூறுகையில், சுமார் 30 மணிநேரத்திற்கு பிறகு அனவ் வெளியில் இருந்த அவர் வீட்டிற்கு வந்தடைந்துள்ளார். எனது மகன் திரும்பி வந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளோம். நான் இனி அனவிடம் எது குறித்தும் கேட்க போவதில்லை” என்றார்.
புதன்கிழமை மதியம் அனவின் அம்மாவும் சகோதரியும் தூங்கிக் கொண்டிருந்தபோது கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் என்று சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த கடிதத்தில், “மன்னிக்கவும், உங்களுக்கு தகுதியான மகனாக நான் இல்லை” என எழுதப்பட்டிருந்தது.
வரவிருக்கும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து மன அழுத்தம் காரணமாக அனவ் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அனவ் தனது முதல் பருவ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் அவரது பெற்றோர் வாட்ச் ஒன்றை பரிசாகக் வழங்கினர் என்று மனநல மருத்துவரும் அனவ் குடும்பத்தின் நண்பருமான மெஹ்னாஸ் ஜாபர் அலி கூறினார்.