இரு தினகளுக்கு முன்னதாக துபாயில் இந்திய குடும்பத்தினரின் பேசும் வளர்ப்பு கிளி காணாமல் போனதால் கண்டுபிடித்து தரும் நபருக்கு 4 ஆயிரம் திர்ஹம்ஸ் வழங்க இருப்பதாக கிளியின் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன இந்தியரின் கிளியை கண்டுபிடித்து 4 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசைப் பெற்றுள்ளார்.
தனது வளர்ப்புக் கிளி திரும்ப கிடைத்ததில் எனது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக உரிமையாளர் குமார் கூறினார். “கிளியும் எங்களிடம் திரும்ப வந்ததில் சந்தோஷமாக உள்ளது. அப்பாவான என்னை பார்த்ததுமே கிளி பேச ஆரம்பித்துவிட்டது” என்றார்.
“கடந்த இரண்டு நாட்கள் எனக்கும், எனது பெற்றோருக்கு கவலை மிகுந்ததாக இருந்தது. தற்போது கிளி திரும்ப கிடைத்திருப்பது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மகிழ்ச்சியை வெளிக்காட்ட வார்த்தைகள் இல்லை” என்றும் குமார் கூறினார்.
முன்னதாக மித்து என்று செல்லமாக அழைக்கப்படும் கிளி 12 ஆண்டுகளாக ஒரு குடும்ப உறுப்பினர் போல இருந்துவிட்டு திடீரென்று காணாமல் போனதால் உரிமையார்கள் கலக்கமடைந்தனர்.
இதனால், கிளியை கண்டுபிடித்து தருபவருக்கு 4 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசு வழங்க உள்ளதாக உரிமையாளார்கள் தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன கிளியை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்து 4 ஆயிரம் திர்ஹம்ஸை பெற்று சென்றார்.
ஆப்பிரிக்க கிரே கிளியான இது, மிகவும் பிரபலமான பறவைகளில் ஒன்றாகும். அக்கிளிகள் நீண்ட ஆயுள் காலமும், பேசும் திறனும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.