அமீரகத்தில் முன்பைப்போல நாள்தோறும் புதிய புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அனைத்து எமிரேட்களிலும் குவாரண்டைன் துவங்கி, பல்வேறு வகையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுவருவது நாம் அறிந்ததே. இந்நிலையில், நம்முடைய உடல்நலத்தைப் பாதுகாப்பதே மிக முக்கிய பணியாக இருக்கிறது.
வீடு, குழந்தைகள் என நம் அன்புக்குரியவர்கள் அனைவரையும் பிரிந்து நாம் கடல்கடந்து அமீரகம் வந்திருப்பதே, அவர்களுடைய எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காகத்தான். அதற்கு முதலில் நாம் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் என கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தாலும் நம்மை அறியாமலேயே வெளியே சென்றுவிட்டு அறைக்குத் திரும்புகையில் கொரோனா போன்ற நுண் கிருமிகள் நம் மூலமாக அறையில் பரவ வாய்ப்புகள் மிக அதிகம்.
இதன் காரணமாகவே, அலுவலகங்களை சீரான இடைவெளியில் சுத்திகரிப்பு செய்யுங்கள் என அமீரக அரசு நிறுவன தலைவர்களை வலியுறுத்திவருகிறது. இது நம்முடைய அறைகளுக்கும் பொருந்தும். முக்கியமாக ஒரே அறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கியிருப்பது கிருமிகள் பரவும் அபாயத்தையும் பல மடங்கு அதிகரிக்கும். ஆகவே, நம்முடைய சுற்றுப்புறத்தை சீரான இடைவெளியில் சுத்திகரிப்பு செய்துகொள்வதே இந்த துயர்மிகுந்த கொரோனா பேரிடரிலிரிந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே வழி.
சுத்திகரிப்பு என்றவுடன், எதோ பெரிய சமாச்சரம் போலயே?, அதற்கும் செலவாகுமே? எனப் பயப்பட வேண்டாம். குறைவான கட்டணத்தில் உலகத் தரத்திலான சுத்திகரிப்பு கருவிகளைக்கொண்டு உங்களது சுற்றுப்புறத்தை தூய்மையான இடமாக மாற்றித் தருகிறார்கள் MMTS நிறுவனத்தார்.
தமிழர்களால் நிர்வகிக்கப்படும் இந்த நிறுவனம் கீழ்க்கண்ட சேவைகளை மிகக்குறைந்த கட்டணத்தில் மேற்கொண்டு வருகிறது.
- வீடு/அலுவலக சுத்திகரிப்பு
- தினசரி அலுவலக சுத்திகரிப்பு
- தரை சுத்திகரிப்பு
- பொதுப் பகுதிகளுக்கான பராமரிப்பு
- சில்லறை வர்த்தகக் கடைகளுக்கான சுத்திகரிப்பு
- கழிப்பறை தூய்மைப்பணி
- கட்டிடங்களின் வெளிப்புறப் பகுதி தூய்மைப்பணி
- கிருமிநாசினிப் பயன்பாடுகள்
- தரை விரிப்பு மற்றும் இருக்கைகள் சுத்திகரிப்பு
- உயரமான கட்டிடங்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளை தூய்மைப்படுத்தும் பணிகள்.
- ஒப்பந்தத்தின் அடிப்படியில் வர்ணப்பூச்சு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
துபாயைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக ஸ்டார் சினிமாஸ் உள்ளிட்ட துபாயின் பல முன்னணி நிறுவனங்களுக்கு சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
வீடுகள், வில்லாக்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஒவ்வொரு இடத்திலும் என்ன மாதிரியான சுத்திகரிப்பு அவசியம் என்பதை அறிந்து அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக தேர்ந்த அனுபவமுள்ள பணியாளர்களைக்கொண்டு சுத்திகரிப்புப் பணிகளை MMTS மேற்கொண்டுவருகிறது.
முன்பே சொன்னதுபோல, இந்த அச்சம் தரும் கொரோனா காலத்தை நாம் கடந்திட நம்முடைய சுகாதாரமே அஸ்திவாரம். அதனை MMTS நிறுவனத்துடன் இணைந்து பெற்றிடுங்கள்.
தொடர்புக்கு
- போன் :
- வாட்சாப் : +971 55 239 7988