பிரதமர் மோடி, அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத்தை சந்தித்து பேச்சுவார்த்தை!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய விருதான THE ORDER OF JAYED விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நாம் முன்னரே பதிவிட்டு இருந்தோம்.

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அபுதாபி நகரில், அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இருதரப்பு உறவு, வர்த்தகம், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் இருந்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு THE ORDER OF JAYED விருது வழங்கப்பட்டது.

அமீரகத்தின் தந்தை என கருதப்படும் Sheikh Zayed bin Sultan Al Nahyan பெயரிலான இந்த விருது, அந்த நாட்டின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பட்டத்து இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத்திற்கு நன்றி தெரிவித்தார்.

Loading...