UAE Tamil Web

“உலகில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிடவேண்டும்”- அபுதாபி இளவரசருடன் போனில் பேசிய பில்கேட்ஸ்..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளையின் இணைத் தலைவரான பில்கேட்ஸ் போன் மூலமாக ஈத் அல் பித்ர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் அமீரக மக்கள் செழிப்புடன் வாழ வாழ்த்தினார்.

கஷ்டப்படும் மக்களுக்கு கொரோனா காலத்தில் எவ்வாறு உதவலாம் மற்றும் அதற்கான ஒத்துழைப்பு குறித்து இருவரும் கலந்துரையாடினர். உலகளவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர, கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் வழங்கும் முயற்சியில் ஈடுபடவேண்டிய கட்டாயம் குறித்தும் பேசப்பட்டது.

ஷேக் முகமது ஈத் வாழ்த்துக்களுக்காக பில் கேட்ஸுக்கு நன்றி தெரிவித்ததோடு, அமீரகத்தின் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் அதன் தாக்கங்களைத் தணிக்கவும் உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.

தடுப்பூசிகளை வழங்குவதற்கான தளவாட ஆதரவை வழங்குவதன் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமாகவோ உலகின் பல நாடுகளுக்கு உதவுவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனிதாபிமானப் பங்கை பில் கேட்ஸ் பாராட்டினார்.

அதேபோல, பெருந்தோற்று துவங்கிய காலத்தில் இருந்தே உலகளவில் சிறந்த தடுப்பு வழிமுறைகளை ஏமிராட்டி சமூகம் கடைப்பிடித்து, கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க பாடுபட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.