UAE Tamil Web

கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கோல்டன் விசா – அபுதாபி இளவரசரின் மாஸ் அறிவிப்பு..!

Mohamed-Bin-Zayed

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதபப்டையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தகுதிவாய்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கோல்டன் விசா வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் கொரோனா என்னும் பெருந்தொற்றில் இருந்து அமீரகத்தைக் காக்க கடுமையாகப் போராடி வரும் பணியாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கும்படி அபுதாபி இளவரசர் உத்தரவிட்டுள்ளார்.

அமீரகத்தின் முன்களப் பணியாளர்களின் தியாகத்தையும் அவர்களது கடின உழைப்பையும் பாராட்டும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பிற்கு பலரும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

Mohamed-Bin-Zayed
1 Share
Share via
Copy link