அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” அமீரகத்திற்கு பல்வேறு சாதனைகளை புரிய வாய்ப்பளித்த 2021 ஐ வழியனுப்பி 2022 ஆம் ஆண்டை புத்துணர்வுடன் வரவேற்போம். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இப்புத்தாண்டு அனைவருக்கும் அமைதியைத் தரட்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
As we bid farewell to a year full of achievements for the UAE, we welcome 2022 with confidence of the best to come.
Happy New Year to you, your families and your countries .
May the New Year 2022 bring peace and prosperity to humanity.
— HH Sheikh Mohammed (@HHShkMohd) December 31, 2021
அதேபோல, அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,” இந்த புத்தாண்டை நம்பிக்கையுடனும் நேர்மையான எண்ணங்களுடனும் வரவேற்போம். நம்முடைய தேசம் மேலும் சாதனைகளை புரிய உறுதியேற்போம். இந்த ஆண்டு அமீரக மற்றும் உலக மக்களுக்கு அமைதியைத் தரட்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
We welcome the new year with hope and optimism for the future and a shared determination to continue building on the achievements of our nation. May the year ahead bring peace and wellbeing to the people of the UAE and the world
— محمد بن زايد (@MohamedBinZayed) December 31, 2021