UAE Tamil Web

அனைத்து மக்களுக்குமான எளிமையான அரசாக அமீரகத்தை மாற்றாமல் ஓயப்போவதில்லை – அபுதாபி இளவரசர் மற்றும் துபாய் ஆட்சியாளர் சந்திப்பில் முடிவு..!

ABU DHABI, UNITED ARAB EMIRATES - August 25, 2021: HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces (L) meets with HH Sheikh Mohamed bin Rashid Al Maktoum, Vice-President, Prime Minister of the UAE, Ruler of Dubai and Minister of Defence (R), at Al Shati Palace. ( Hamad Al Kaabi / Ministry of Presidential Affairs )​ ---

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து அமீரகத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

பிராந்திய மற்றும் உலக அளவில் பொருளாதார முன்னேற்றத்தில் அமீரகத்தின் நிலையை மேலும் மேம்படுத்தத் தேவையான முக்கிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

வரும் காலங்களில் அமீரகத்தினை உலகத்தின் பொருளாதார மையமாக மாற்றவும் மனிதத்திற்கான மண்ணாக அமீரகத்தை வளம்பெறச் செய்யவும் பல்வேறு துறைகளில் முன்னேறவும் எடுக்க வேண்டிய திட்டங்கள் பற்றி இந்த சந்திப்பில் இருவரும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைகளைத் தாண்டி அனைவருக்கும் உரிய எளிமையான அரசாக அமீரகம் திகழ வேண்டிய கட்டாயம் குறித்து துபாய் ஆட்சியாளர் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது அமீரகத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ABU DHABI, UNITED ARAB EMIRATES - August 25, 2021: HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces (L) meets with HH Sheikh Mohamed bin Rashid Al Maktoum, Vice-President, Prime Minister of the UAE, Ruler of Dubai and Minister of Defence (R), at Al Shati Palace. ( Hamad Al Kaabi / Ministry of Presidential Affairs )​ ---
0 Shares
Share via
Copy link