UAE Tamil Web

அபுதாபி இளவரசருக்கு போன் மூலமாக ஈத் அல் அத்ஹா வாழ்த்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர்..!

sheikh zayed

இஸ்ரேலின் பிரதமர் நஃப்தாலி பென்னட், அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களுக்கு போன் மூலமாக ஈத் அல் அத்ஹா வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்த உரையாடலின்போது இருநாட்டு உறவுகள், பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. உலகளவில் அமைதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

நீண்ட ஆயுளோடும் நீடித்த புகழோடும் வாழவும் அமீரகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கவும் பென்னட் வாழ்த்தினார். இதற்கு நன்றி தெரிவித்த இளவரசர் அனைத்து மக்களுக்கும் அமைதி ஏற்படுத்த அதிபருக்கு அழைப்பு விடுத்தார்.

அதேவேளையில் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பென்னட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார் இளவரசர். பிராந்திய மற்றும் உலக மக்களின் அமைதிக்கான தேவைகளை நிறைவேற்றும் தலைவராக விளங்க வாழ்த்துவதாக இளவரசர் குறிப்பிட்டார்.

sheikh zayed
0 Shares
Share via
Copy link