UAE Tamil Web

ஒரு போட்டோ எடுத்துக்கலாமா..? தாராளமா.. – அமீரகத்தில் ஆப்கான் மக்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரடியாகச் சென்ற அபுதாபி இளவரசர்..!

MBZ-afghan-two-

அரசியல் ரீதியிலான பதற்றம் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமீரகம் வந்த மக்கள் அனைவரும் எமிரேட்ஸ் ஹியூமனேட்டேரியன் சிட்டியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் உதவியுடன் அமீரகம் வழியாக பிற நாடுகளுக்கு பயணிக்க இருக்கும் இம்மக்களின் தேவைகள், அவர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து ஆராய அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேரடியாக எமிரேட்ஸ் ஹியூமனேட்டேரியன் சிட்டிக்குச் சென்றார்.

அங்கு, தங்கியுள்ள மக்களுடன் உரையாடிய இளவரசர், குறைகள் ஏதும் இருக்கின்றனவா? எனக் கேட்டறிந்தார். மேலும், அவர்களது எதிர்கால பயணத் திட்டங்கள் வகுக்கப்படும் முறைகள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதுகுறித்துப் பேசிய அவர்,” மனிதாபிமான முயற்சிகளை மேற்கொள்வதை அமீரகம் எப்போதும் நிறுத்தாது. அமீரக மண்ணின் பண்பான நல்லதை செய்வது, பிறருக்கு கொடுத்து உதவுவது என்பது அனைத்து குடிமகனுக்குள்ளும் இருக்கிறது. மேலும் சோதனைக் காலங்களில் மனித சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமைக்கு ஆதரவாக அமீரகம் தொடர்ந்து செயல்படும்” என்றார்.

இளவரசரின் வருகையின்போது ஆப்கான் சிறுவன் ஒருவன், புகைப்படம் எடுத்துக்கொள்ளளாமா? எனக் கேட்க, இளவரசரும் “தாராளமாக” எனச் சொல்லி அவனுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

MBZ-afghan-two-
2 Shares
Share via
Copy link