இன்று உலக போலியோ தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், போலியோவை ஒழிப்பதில் அயராது ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
நம்முடைய பங்குதாரர்களுடன் இணைந்து போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம் எனவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அபுதாபி இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.
Thanks to the dedication of many, including frontline health workers, remarkable progress has been made in the global effort to end polio. Today on #WorldPolioDay, together with our partners, we reaffirm our commitment to working towards a safer, healthier future free from polio. pic.twitter.com/47dsQEF3Ki
— محمد بن زايد (@MohamedBinZayed) October 24, 2021