UAE Tamil Web

“ஈத் அல் அத்ஹா வாழ்த்துகள்” – அரபு நாட்டு தலைவர்களுக்கு போன் மூலமாக வாழ்த்து தெரிவித்த அபுதாபி இளவரசர்..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமை துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அரபு தேச தலைவர்களுக்கு போன் மூலமாக ஈத் அல் அத்ஹா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

குவைத்தின் எமிர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார் அபுதாபி இளவரசர். ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா; எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் பத்தா எல்-சிசி; ஈராக் ஜனாதிபதி பர்ஹாம் சாலிஹ், மவுரித்தேனியாவின் தலைவர் முகமது ஓல்ட் கசொவ்னி, குவைத்தின் பட்டத்து இளவரசர் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா, ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி மற்றும் ஈராக்கிய குர்திஸ்தானின் தலைவர் நெச்சிர்வன் பர்சானி ஆகியோருக்கு ஈத் அல் அத்ஹா வாழ்த்துகளை தெரிவித்தார் அபுதாபி இளவரசர்.

மேலும், அமைதியும் வளர்ச்சியும் ஏற்படட்டும் என்ற ஷேக் கலீஃபாவின் வாழ்த்துச்செய்தியை மேற்கண்ட நாட்டுத் தலைவர்களிடம் இளவரசர் தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த தலைவர்கள் ஷேக் கலீஃபாவின் அறிவார்ந்த தலைமையின்கீழ் அமீரகம் பாதுகாப்பையும் அமைதியும் பெற்று விளங்கிட வாழ்த்துவதாக தெரிவித்தனர்.

அதேபோல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் வளர்ச்சி மேலோங்கிட வாழ்த்துவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

Sheikh Mohamed bin Zayed Al Nahyan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap