UAE Tamil Web

காட்டுத்தீயில் பலியான 69 பேர் ; போன் மூலமாக ஆறுதல் தெரிவித்த அபுதாபி இளவரசர்..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

அல்ஜீரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீ பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சாம்பலாக்கியிருக்கிறது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உட்பட 69 பேர் இதுவரையில் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அல்ஜீரியாவின் மன்னரான அப்துல் மஜீத் தெபுன்னே அவர்களுக்கு போன் மூலமாக இரங்கல் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய அல்லாவிடம் பிரார்த்திப்பதாகவும் அபுதாபி இளவரசர் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய நிலையை கருத்தில்கொண்டு நட்பு நாடு என்ற ரீதியில் அல்ஜீரியாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமீரகம் வழங்கும் என இளவரசர் தெரிவித்தார்.

போன் மூலமாக தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய அபுதாபி இளவரசருக்கு நன்றி தெரிவிப்பதாக தெபுன்னே குறிப்பிட்டார்.

Sheikh Mohamed bin Zayed Al Nahyan
0 Shares
Share via
Copy link