UAE Tamil Web

ஆட்சியாளராகி 40 ஆண்டுகள் நிறைவு : அஜ்மான் ஆட்சியாளரை வாழ்த்திய ஷேக் முகமது..!

WAM-FILE-MBR-HUMAID-

அஜ்மானின் ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி ஆட்சிப் பொறுப்பேற்று 40 ஆண்டுகள் ஆகின்றன. இதனைமுன்னிட்டு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், அஜ்மான் ஆட்சியாளருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,”என் சகோதரர், ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுவைமி … 40 வருடங்களாக தேசத்திற்கு சேவை செய்துவருகிறார் … 40 ஆண்டுகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அணிவகுப்பில் பங்குதாரராகவும் ஸ்தாபகத் தலைவராகவும் … ஷேக் ஹுமைத் நம் நாட்டின் வரலாற்றில் தனது பெயரைப் பொறித்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரக மக்களின் இதயங்களில் அவர் மீதான அன்பு நிலைபெற்றுள்ளது. … அனைவரும் உங்களை ஆசீர்வதிப்பார்கள்.. அபு அம்மார்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அஜ்மான் ஆட்சியாளராக ஷேக் ஹுமைத் பின் ரஷீத் அல் நுவைமி பதவியேற்றுக்கொண்டு நேற்றோடு (செப்டம்பர் 6) 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அவரது தந்தையும் முன்னாள் அஜ்மான் ஆட்சியாளருமான ஷேக் ரஷீத் பின் ஹுமைத் அல் நுவைமி அவர்கள் 1928 முதல் அவர் இறக்கும் வரையில் அதாவது 1981 செப்டம்பர் 6 ஆம் தேதி வரையில் அஜ்மானின் ஆட்சியாளர் பொறுப்பில் இருந்தார்.

அஜ்மான் ஆட்சியாளராக ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுவைமி பதவியேற்ற 40 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் நோக்கில் அஜ்மானில் உள்ள குறைவான ஊதியம் பெறும் குடும்பங்களுக்கு உதவ 4 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை அவர் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

WAM-FILE-MBR-HUMAID-
0 Shares
Share via
Copy link