அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.
எங்கு சென்றாலும் குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசும் துபாய் ஆட்சியாளரை சந்திக்க, சிறுமி ஒருவர் விருப்பப்பட்டிருக்கிறார். துபாய் ஆட்சியாளருடன் புகைப்படம் எடுக்க முடியாததால் அச்சிறுமி அழும் வீடியோவும் வெளியாகி வைரலானது.
இதனை அறிந்த துபாய் ஆட்சியாளர் அச்சிறுமியை சந்திக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனிடையே இன்று துபாய் எக்ஸ்போ வளாகத்தில் அச்சிறுமியை சந்தித்திருக்கிறார் ஷேக் முகமது.
துபாய் ஆட்சியாளரைப் பார்த்ததும் ஓடிச்சென்று அணைத்துக்கொண்ட அக்குழந்தையுடன் ஷேக் முகமது போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த வீடியோவை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
محمد بن راشد يلبي رغبة طفلة بالتقاط صورة معه في إكسبو 2020 دبي. pic.twitter.com/chuUZrVr5g
— Hamdan bin Mohammed (@HamdanMohammed) October 30, 2021
