அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், இன்று பஹ்ரைன் மன்னர் மேன்மைபொருந்திய ஹமாத் பின் ஈசா அல் கலீஃபாவை சந்தித்தார்.
அபுதாபியில் உள்ள துபாய் ஆட்சியலரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது இருநாட்டு உறவுகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், கொரோனா சூழ்நிலையை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது என்பது பற்றியும் வளைகுடா நாடுகளில் அமீரகமும் பஹ்ரைனும் எவ்வாறு தனித்து இயக்குகின்றன என்பது குறித்தும் துபாய் ஆட்சியாளர் கருத்து தெரிவித்தார்.
محمد بن راشد يلتقي ملك البحرين وذلك بمقر إقامة جلالته في أبوظبي. pic.twitter.com/y2Ab2jXGOz
— Dubai Media Office (@DXBMediaOffice) October 28, 2021
