UAE Tamil Web

2021 அமீரக வரலாற்றிலேயே சிறந்த வருடமாக இருக்கும் : அபுதாபி இளவரசரை சந்தித்த துபாய் ஆட்சியாளர் உறுதி..!

sheikh mohammed and al nahyan

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படை தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் அல் மர்மூம் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பாலைவன ஏரிக்கு சுற்றுலா சென்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் துபாய் ஆட்சியாளர்,” சகோதரரும் தலைவரும் எனது நண்பருமான ஷேக் முகமது பின் சயீத் என்னை சந்தித்தார். அமீரகத்தின் சிறப்பான எதிர்காலத்தைக் குறித்துப் பேசினோம். 2021 ஆம் ஆண்டு நிச்சயம் அமீரக வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும் என நாங்கள் தீர்க்கமாக நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி துபாய் ஆட்சியாளர் வேர்ல்ட் கூலஸ்ட் விண்டர் (World’s Coolest Winter) என்னும் பெடரல் உள்நாட்டு சுற்றுலா திட்டத்தை துவங்கிவைத்தார். இதன் நீட்சியாக இரு தலைவர்களும் அல் மர்மூம் ஏரிக்கு சுற்றுலா சென்றனர்.

இதனைப் பற்றி துபாய் ஆட்சியாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில்,”நான் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இருக்கும்போது சுற்றுப்பயணங்களும் வாழ்க்கையும் அழகாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நாட்டின் பிரசித்திபெற்ற தலங்களுக்கு பயணிக்கும் நோக்கில் துவங்கப்பட்டு 45 நாட்கள் நீடிக்கும் இந்த திட்டத்தினை உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள், பொருளாதார அமைச்சகம் மற்றும் அமீரக ஊடக அலுவலகம் ஆகியவை மேற்பார்வையிடுகின்றன.

sheikh mohammed and al nahyan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap