UAE Tamil Web

துபாய் பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள பிறை வடிவிலான ஏரி – சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவும் வீடியோ..!

lake

துபாயில் வாழ்ந்துவரும் முஸ்தபா என்னும் புகைப்படக் கலைஞர் துபாயின் பாலைவனத்திற்கு நடுவே, அமைந்துள்ள பிறை வடிவிலான ஏரி ஒன்றினை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,” துபாய் பாலைவனத்தின் நடுவே நான் நிலவைக் கண்டுபிடித்திருக்கிறேன். மறைந்துள்ள இந்த பொக்கிஷம் அரிதாகவே மனிதர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே ஓரிக்ஸ் (oryx) எனப்படும் மான் அதிகளவில் காணப்படுகிறது. இங்கே சூரிய உதயமும், அஸ்தமனமும் பிரமாதமாக இருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mostafa ® (@100.pixels)

வெற்றுப் பாலைவனத்திற்கு நடுவே அமைந்துள்ள இந்த ஏரி குறித்து பலரும் ஆர்வமாக கமெண்ட் செய்துவருகிறார்கள்.

lake
0 Shares
Share via
Copy link