UAE Tamil Web

“கோடை காலத்தில் ஏற்படும் அதிக தேவை”.. அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு கூடுதல் Charter விமானங்கள் இயக்க முடிவு!

அமீரகத்தில் உள்ள ஒரு சில டிராவல் ஏஜென்சிகள், விமான தேவை அதிகம் உள்ள கோடை காலத்தில், மலிவு விலையில், இங்கிருந்து இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு Charter விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Charter விமானங்கள் என்பது ஒரு விமான சேவை நிறுவனத்தின் வழக்கமான அட்டவணையின் ஒரு பகுதியாக அல்லாமல், ஒரு குறிப்பிட்ட பயணத்திற்காக இயக்கப்படும் விமானங்கள்.

ஜூலை – ஆகஸ்ட் பள்ளி விடுமுறையின் போது இந்திய நகரங்களுக்கு அதிக விமானக் கட்டணங்கள் இருப்பதால், பயண முகமைகள், துபாயில் இருந்து கேரளாவுக்கு One Way பயணத்திற்கு Dh 1,070 க்கும் குறைவான விலையில் சேவைகளை வழங்குகின்றன.

துபாயை தளமாகக் கொண்ட டிராவல் ஏஜென்சியான ஈக்வேட்டர் டிராவல் மேனேஜ்மென்ட் எல்எல்சி, ஊடகங்களுடம் பேசியபோது “ராஸ் அல் கைமாவிலிருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாடகை விமானத்தை ஜூலை 5 அன்று இயக்கியபோது (Adult Fare) டிக்கெட்டுக்கு Dh 1070க்கு ஏற்பாடு செய்வதாக உறுதிப்படுத்தியது.

மேலும் இந்த பயணத்திற்கு குழந்தைகளுக்கு Dh 250 வசூலிக்கப்படும், அவர் மேலும் கூறியபோது இந்த விமான டிக்கெட்டுகளை ஒரு வாரத்திற்குள் விற்றுவிட முடியும் என்று தெரிவித்தனர்.

ஜூலை 1 முதல், அமீரகத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் விமானங்களின் விமானக் கட்டணம் 2,900 மற்றும் அதற்கு மேல் உள்ளதாக பயண ஒருங்கிணைப்பாளர் ஸ்கைஸ்கேனர் தெரிவித்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap