UAE Tamil Web

அமீரகம்.. தொழிலாளர் நலன் காக்கும் Midday Break – முதலாளிகள் கூடுதல் கவனம் செலுத்த புதிய திட்டம்

அமீரகத்தில் கடந்த ஜூன் 15ம் தேதி துவங்கி செப்டம்பர் 15ம் 2022 வரை Midday Break அமலில் இருக்கும். இந்நிலையில் Midday Break விதியின்படி, வெயிலில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து முதலாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த Heat Stress Management Programme திட்டம் அபுதாபியில் தொடங்கப்பட்டுள்ளது.

ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மதியம் 12.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடி வெயிலில் மற்றும் திறந்தவெளியில் செய்யப்படும் பணிகளுக்கு மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தடை விதித்துள்ளது.

அபுதாபி பொது சுகாதார மையத்தின் (ADPHC) ‘வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு’ என்ற திட்டம் வெளியில் வேலை செய்வது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மற்றும் தொழிலாளர்கள் வெப்ப அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பதை அது உறுதி செய்கிறது.

நாளின் வெப்பமான நேரங்களில் தொழிலாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலாளிகளையும் மேற்பார்வையாளர்களையும் அது வலியுறுத்துகிறது. நண்பகல் நேரத்தில் சூரியனுக்கு அடியில் இருப்பதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் சூரிய ஒளியின் எதிர்மறை விளைவுகளைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து தொழிலாளர்களுக்குக் கற்பிப்பதிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.

ADPHCன் டைரக்டர் ஜெனரல், Matar Saeed Rashed Al Nuaimi பேசுகையில், இந்தத் திட்டத்தின் நோக்கம், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் காயங்களிலிருந்து பாதுகாப்பதற்கும், மதிய வேலை நேரத்தில் விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு கல்வி கற்பிப்பதாகும் என்றார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap