UAE Tamil Web

இந்தியாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக அமீரகம் வந்த 95 இந்தியர்கள்..!

Zulekha-Hospital-Staff-Travelling-to-UAE-

பயணத்தடை காரணமாக இந்தியாவில் சிக்கிக்கொண்ட சுலேகா மருத்துவமனைப் பணியாளர்களை மீண்டும் அமீரகம் அழைத்துவரும் பணியில் அந்த மருத்துவமனை நிர்வாகம் இறங்கியுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு விமானங்களை இந்தியா – அமீரகத்திற்கு இயக்க துபாய் சுகாதாரத்துறையிடம் அந்நிறுவனம் அனுமதி கோரியது.

விடுமுறை காரணமாக இந்தியா சென்றவர்கள் பயணத்தடை காரணமாக மீண்டும் அமீரகம் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சுலேகா மருத்துவமனையின் கோரிக்கையை துபாய் சுகாதாரத்துறை ஏற்று, அனுமதி வழங்கியதையடுத்து முதற்கட்டமாக 95 மருத்துவப் பணியாளர்கள் இந்தியாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக அமீரகம் வந்தடைந்தனர்.

கடந்த 9 ஆம் தேதி இந்த விமானம் இயக்கப்பட்டது. வரும் புதன்கிழமை மீண்டும் ஒரு விமானம் இந்தியா – அமீரகம் இடையே இயக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொச்சி, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் சிக்கிக்கொண்ட பணியாளர்கள் இதன்மூலம் அமீரகம் வந்தடைந்தனர்.

இதுகுறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் மூத்த இயக்குனர் விஜயா சென்,” இந்தியாவில் சிக்கிக்கொண்ட எங்களது பணியாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம். மீண்டும் அவர்களை அமீரகம் அழைத்துவரும் பணிகளை சரியான நேரத்தில் துவங்கினோம். சிறப்பு விமானத்தினை இயக்க அனுமதியளித்த அமீரக அரசுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்”

“விமான பயணத்திற்கு முன்பாக எங்களது பணியாளர்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடித்தனர். இவர்களுக்கான குவாரண்டைன் வசதிகளை நாங்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். எங்களுடைய சிறப்புக்குழு ஒன்று, பயணிகளின் சுகாதார நிலையை தொடர்ந்து கண்காணித்துவருகிறது. இந்த கொரோனா சூழலில் அனுபவம் மிக்க பணியாளர்களை சுகாதார நிறுவனங்கள் இழக்க கூடாது என்பதை உறுதிபடுத்தும் வகையில் துபாய் சுகாதாரத்துறை இந்த சிறப்பு அனுமதியை வழங்கியுள்ளது” என்றார்.

Zulekha-Hospital-Staff-Travelling-to-UAE-
0 Shares
Share via
Copy link