UAE Tamil Web

ஷார்ஜா: கடந்த ஆண்டில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இளம் வாகன ஓட்டிகள் சாலை விபத்தில் மரணம்!

ஷார்ஜாவில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 24 இளம் வாகன ஓட்டிகள் உயிரிழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 306 விபத்துகள் ஷார்ஜாவில் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் 147 விபத்துகள் 18 – 30 வயதுக்குள்ளான வாகன ஓட்டிகளால் ஏற்பட்டுள்ளதாக ஷார்ஜா போக்குவரத்து மற்றும் ரோந்து காவல்துறை இயக்குநர் முகமது அல் நக்பி தெரிவித்துள்ளார். இதேபோல துபாய் காவல்துறை 2019ல் நிகழ்ந்த விபத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. 1,360 விபத்துகளில் 132 பேர் பலியானதாகவும் 154 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 875 விபத்துகள் 18-35 வயதுக்குள்ளான வாகன ஓட்டிகளால் ஏற்பட்டவை. இந்த விபத்துகளால் 77 இளம் வாகன ஓட்டிகள் மரணமடைந்ததோடு 96 பேர் படுகாயம் அடைந்ததாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து சம்பவங்களை தவிர்க்க வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஷார்ஜா காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Shares
Share via
Copy link