UAE Tamil Web

இந்தியரால் துவங்கப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கோல்டன் விசாவை அறிவித்தது அமீரக அரசு..!

Dr-Azad-Moopen_17afb8a68f9_large

1987 ஆம் ஆண்டு இந்தியரான டாக்டர். ஆசாத் மூப்பன், துபாயில் தனது முதல் மருத்துவ கிளீனிக்கை துவங்கினார். அப்படித்தான் துவங்கியது அஸ்தர் DM ஹெல்த்கேர் (Aster DM Healthcare) மருத்துவ குழுமம். இன்று 7 நாடுகளில் 275 மருத்துவமனைகள், 115 கிளினிக்குகள் மற்றும் 223 மருந்தகங்கள் கொண்ட 365 யூனிட்களின் சர்வதேச கூட்டமைப்பு என மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது.

குறிப்பாக அமீரகத்தில் சுகாதார சேவையை தன்னிகரற்று வழங்கிவரும் இந்த மருத்துவமனையைச் சேர்ந்த 319 மருத்துவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை வழங்குவதாக அமீரக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய இந்நிறுவனத்தின் இயக்குனர் மேலாளர் டாக்டர் ஆசாத் மூப்பன்,” அமீரக மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கிவரும் அஸ்தர் DM ஹெல்த்கேர் மருத்துவ குழுமத்தைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுவது எங்களது மருத்துவர்களுக்குக் கிடைத்த பெருமையாகும். மருத்துவ ஆராய்ச்சி, அறிவியல் திறமைகளுக்கான மையம் மற்றும் சிறந்த மருத்துவம் போன்ற நெடுநாள் திட்டங்களை ஒருங்கிணைப்பதில் அமீரக ஆட்சியாளர்கள் காட்டும் அக்கறைக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். கோல்டன் விசாவைப் பெறும் எங்களது மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

மூப்பனின் சேவையைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. போலவே இந்நிறுவனத்தின் துணை இயக்குனர் அலிஷா மூப்பனுக்கும் கோல்டன் விசாவானது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dr-Azad-Moopen_17afb8a68f9_large
0 Shares
Share via
Copy link