உலகில் மிக ஆற்றல் மிக்க பாஸ்போர்ட் தரவரிசையில் UAE முன்னேற்றம்!

The UAE passport has jumped 20 spots in the last decade and has been ranked 20th among the most powerful passports for 2019.

உலகில் மிக ஆற்றல் மிக்க பாஸ்போர்ட் தரவரிசையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னேறியுள்ளது. இதில் இந்தியா 86 வது இடத்தில் உள்ளது குறிப்பித்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் 2019 ஆண்டிற்கான மிக ஆற்றல் மிக்க பாஸ்போர்ட்களில் 20 வது இடத்தை பிடித்துள்ளது.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் காலாண்டு அறிக்கையில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் அல்லது விசா-ஆன்-வருகை அடிப்படையில் நுழைய முடியும் என்பதை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சுமார் 199 வலுவான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரக வாசிகள் விசா இல்லாமல் பயணிக்க கூடிய இடங்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காக இந்த வருடம் அதிகரித்துள்ளது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா 86 வது இடத்தில் உள்ளது, இதே இடத்தில் மவுரித்தேனியா (Mauritania), தீவு தேசமான சாவோ டோம் (Sao Tome) மற்றும் பிரின்சிப்பி (Principe) உள்ளன. மேலும் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் முறையே 99, 101 மற்றும் 106 இடங்களில் உள்ளன.

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் முதல் 5 தரவரிசை பட்டியல்:

1. ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்.

2. பின்லாந்து, ஜெர்மனி, தென் கொரியா.

3. டென்மார்க், இத்தாலி, லக்சம்பர்க்.

4. பிரான்ஸ், ஸ்பெய்ன், ஸ்விடன்.

5. ஆஸ்திரியா, நெதர்லாந்த், போர்ச்சுகள், சுவட்ச்சர்லாந்த்.

பலவீனமான நாடுகள் பட்டியல்:

100. கொசோவோ

101. வங்கதேசம் ஈரான் லெபனான் மற்றும் வட கொரியா.

102. நேபால்.

103. லிபியா, பாலஸ்தீன் மற்றும் சூடான்

104. ஏமன்

105. சோமாலியா.

106. பாகிஸ்தான்.

107. சிரியா.

108. ஈராக்.

109. ஆப்கானிஸ்தான்.

Loading...