UAE Tamil Web

என்ன தடுப்பூசி நீங்க போட்டீங்க? உங்களால எல்லா நாடுகளுக்கும் போக முடியுமா?

கொரோனா பெருந்தொற்று இன்னுமே கட்டுக்குள் வராத நிலையில் அதில் இருந்து மீள பலரும் தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் தற்போது புதிய பிரச்னை ஒன்று முளைத்துள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை ஐரோப்பிய நாடுகள் சில ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வெளிநாட்டில் பணிபுரிவோர் தயக்கம் காட்டினர்.

Vaccine passport could soon be required at movies, airports and concerts | WCIV

அதேசமயம் அமீரகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை கடந்த மாதம் சுகாதாரத்துறை அங்கீகரித்தது. இதனால் இந்தியாவில் இருந்து வரும் மக்களுக்கு எந்தவித சிக்கலும் எழவில்லை. இந்த நிலையில் உலக நாடுகள் அங்கீகரித்த டாப் 10 தடுப்பூசிகள் The Economist பத்திரிகை வெளியிட்டுள்ளது. அவை AstraZeneca, Pfizer-BioNTech, Sputnik V, Sinopharm, Moderna, Johnson & Johnson, Covishield, Sinovac, Covaxin and CanSinoBio. இந்த 10 தடுப்பூசிகளையும் உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளும் அமீரகத்தில் போடப்பட்டு வருவதால் இங்குள்ளவர்கள் உலகின் எந்த மூளைக்கு வேண்டுமேயானாலும் பறக்கலாம். அமீரகத்தில் 70% பேர் முதல் இரு தவணைகளும் 78% பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

10 Shares
Share via
Copy link