ரமலான் மாதத்தின் முதல் நாளில் நாடு முழுவதும் வாகனம் விதிமீறல்களின் அதிகரித்ததாகவும், இதன் விளைவாக போக்குவரத்து ஸ்தம்பித்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
பல குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பத்துடன் நோன்பு திறக்க வீட்டிற்கு விரைந்த செல்லும் நிலையில், இஃப்தாருக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே ஃபுஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் பிற எமிரேட்டுகளில் அதிகப்படியான வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதை போலீஸ் ரேடார்கள் மூலம் கண்டறிந்தனர்.
துபாயில் இருந்து ஷார்ஜா வரை பிற்பகல் 1 மணிக்கு போக்குவரத்து விதிமீறல்கள் ஏற்பட்டன. பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை பல போக்குவரத்து சிக்னல்களில் வானங்கள் முன்னும் பின்னும் இடித்துக்கொண்டன.
இத்திஹாத் சாலை, முகமது பின் சயீத் சாலை, எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷார்ஜாவில் உள்ள அல் வஹ்தா போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் பல சிறிய விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இத்திஹாத் சாலையில், டெய்ரா சிட்டி சென்டரில் இருந்து ஷார்ஜாவில் உள்ள தாவுன் இன்டர்சேஞ்ச் வரை கடும் போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
இதனால் அதிகப்படியான போலிசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் பொறுமையாவும், பாதுகாப்பாகவும் வாகனத்தை ஓட்டவும், நிதானத்தை கடைப்பிடிக்கவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓட்டுநர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான ரமலான் பாதுகாப்பு நினைவூட்டல்களை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
- சாலையில் பொறுமையாக இருங்கள்.
- மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை அவசர நேரத்தில் அலுவலகத்தை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவும்.
- அனைத்து வேக வரம்புகளையும் பின்பற்றவும்.
- உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைப்பிடிக்கவும்.
- இப்தார் நேரத்தில் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே வரவும், தெருக்களில் ஓடவும் அனுமதிக்காதீர்.