UAE Tamil Web

அபுதாபி காவல்துறையின் மகத்தான செயலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

அபுதாபியில் உள்ள காவல் துறையினர், அபுதாபி சிட்டி மற்றும் அல் அய்னில் உள்ள பல்வேறு போக்குவரத்து சிக்னல்களில் ரமலான் முழுவதும் இஃப்தார் நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தினமும் 2,500-க்கும் மேற்பட்ட உணவு மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.

நோன்பு திறக்க வீட்டிற்கு வர தாமதமாகும் ஓட்டுநர்களுக்கு இஃப்தார் உணவை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

வாகன ஓட்டுகள் தங்கள் வீட்டில் இஃப்தார் சாப்பிட விரைந்து செல்ல விரும்புவதால், இந்த திட்டத்தின் மூலம் வேகமாகச் செல்வதைத் தவிர்க்க முடியும் என்று காவல்துறை அதிகாரி சுல்தான் அப்துல்லாஹ் பவசிர் கூறினார்.

“இஃப்தார் நேரத்தில் வேகமாகச் செல்லும் ஓட்டுநர்களால் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த திட்டம் உதவுகிறது. புனித ரமலான் மாதம் முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு இஃப்தாருக்காக மொத்தம் 90,000 உணவு பொட்டலங்கள் வழங்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள 6 போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு இப்தார் உணவை தன்னார்வலர்களுடன் இணைந்து போக்குவரத்து ரோந்துப் பணியாளர்கள் வழங்குவதாக என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அபுதாபியில் உள்ள இடங்களில் இஸ்லாமிக் பேங்க் சிக்னல், சிவில் டிஃபென்ஸ் ரோட் சிக்னல், முஷ்ரிஃப் மால் சிக்னல் மற்றும் பிரெஸ்டீஜ் அல் கலியா சிக்னல் ஆகியவை அடங்கும்.

அதுபோல அல் அய்னில் பகுதிகளில் அல் மக்காமி மற்றும் ஜாமி மால் சிக்னல்களில் இஃப்தார் உணவுகள் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap