அமீரகம் ராஸ் அல் கைமாவில் காலாவதியான உரிமங்களின் 7,772 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமாவில் கடந்த நவம்பர் 2021 இல் செயல்படுத்தப்பட்ட புதிய ரேடார் அமைப்பின் படி மூன்று மாதங்களுக்குள் காலாவதியான உரிமங்களின் 7,772 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராஸ் அல் கைமா சாலை பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் டிராஃபிக் கேமராக்கள் மூலம் சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிக்கவும், சாலை பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை பராமரிக்கவும் ஏற்பாடு நடைபெற்றது.
இந்த கேமராக்கள் மூலம் வாகனப் பதிவு மற்றும் இன்சூரன்ஸ் காலாவதியான வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்று ராஸ் அல் கைமா காவல்துறை தெரிவித்தனர்.
இதனை மீறுபவர்களுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 4 டிராஃபிக் பிளாக் மார்க்குகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விதிமுறை மற்ற எமிரேட்ஸில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.