UAE Tamil Web

பள்ளி பேருந்து நிறுத்தம் குறித்த விதிகளைப் பின்பற்றுமாறு போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

motorists

மாணவர்கள் நேரில் கற்றலுக்குத் திரும்புவதால், பள்ளி பேருந்து நிறுத்தம் குறித்த விதிகளைப் பின்பற்றுமாறு போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரித்தனர்.

பள்ளிப் பேருந்தில் மாணவர்களை இறக்கிச் செல்லும்போதும், ஏற்றிச் செல்லும் போதும், ‘நிறுத்து’ என்ற பலகை இருக்கும் இடத்தில் வாகன ஓட்டிகள் முழுமையாக நிறுத்துமாறு அபுதாபியில் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இன்று முதல் மாணவர்கள் நேரில் பள்ளிக்கு போவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி பேருந்தில் இருந்து ஐந்து மீட்டர் தூரத்தில் நிறுத்து’ பலகை காட்டப்பட்டால், இருவழி சாலையில் இரு திசைகளிலும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

‘நிறுத்து’ பலகைகளை புறக்கணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அவர்களின் உரிமத்திற்கு எதிராக பத்து கருப்பு புள்ளிகள் பெறப்படும் என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களும் மாணவர்களை ஏற்றிச் செல்லும்போது அல்லது இறக்கிச் செல்லும் போது பேருந்துகளில் ‘நிறுத்து’ பலகையைக் காட்ட வேண்டும். ‘நிறுத்து’ அடையாளத்தைக் காட்டாததற்கு 500 திர்ஹம் மற்றும் ஆறு கருப்பு புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் பேருந்து ஏறுவதற்கு முன் அல்லது இறங்குவதை உறுதி செய்யுமாறு பள்ளி பேருந்து கண்காணிப்பாளர்களிடம் போலீஸார் கூறினர்.

மேற்பார்வையாளர்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். தெருக்களைக் கடக்க உதவ வேண்டும் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக பெற்றோர்கள் அல்லது அவர்களின் வீடுகளில் அவர்களுக்காகக் காத்திருக்கும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். எப்போதும் சீட் பெல்ட் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபுதாபியில் உள்ள அதிகாரிகள் 2020 ஆம் ஆண்டில் பள்ளி பேருந்துகளில் ‘நிறுத்து’ குறியீடு மீறல்களைக் கண்டறிய ரேடார்களை செயல்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap