அபுதாபி அரசுடன் இணைந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அபுதாபியில் 200 கோடி டாலர் செலவில் தொழிற்சாலையை திறக்க இருக்கிறது. ADNOC ன் கிளை நிறுவனமான RSC (TA’ZIZ) உடன் இணைந்து பெட்ரோ கெமிக்கல் ஆலையை கட்ட இருக்கிறார் அம்பானி.
அபுதாபியின் அல் ருவைஸ் பகுதியில் இந்த ஆலை அமைய உள்ளது. இங்கே பல்வேறு வகையிலான ஹைட்ரோகார்பன் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இன்னும் 3 வருடங்களில் தொழிற்சாலை முழு கொள்ளளவில் உற்பத்தியைத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளோர்-ஆல்கலி, எத்திலீன் டைகுளோரைடு (EDC), மற்றும் பாலிவினைல் குளோரைடு (PVC) ஆகியவை இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. வளர்ந்துவரும் பிளாஸ்டிக் தேவையை கருத்தில்கொண்டு இந்நடவடிக்கையை முகேஷ் அம்பானி முன்னெடுத்துள்ளார். இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.