இந்தியாவின் பெரும் வணிக குழுமமான ரிலையன்ஸ், தொடர்ந்து தனது வணிகத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு முதலீடுகளை செய்ய உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே அறிவித்திருந்த அபுதாபி கெமிக்கல்ஸ் டெரிவேட்டிவ்ஸ் கம்பெனி RSC லிமிடெட் (TA’ZIZ) நிறுவனத்துடன், 2 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
TA’ZIZ இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக, அபிதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் (ADNOC) மற்றும் ADQ நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் குழுமமும் முதலீடு செய்ய உள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, TA’ZIZ EDC மற்றும் PVC கூட்டு முயற்சியானது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமிரகத்துக்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவுகளுக்கு ஒரு சான்றாகும்.
அபுதாபியில் அல் ருவைஸ் பகுதியில் இருக்கும் தொழிற்பேட்டையில் இந்த TA’ZIZ ஆலை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.