UAE Tamil Web

துபாய் : அடுத்தடுத்து மோதிய கார்கள் – ஸ்தம்பித்த சாலை..!

NAT-ACCIDENT-

துபாயில் நேற்று இருவேறு இடங்களில் நடந்த வாகன விபத்தில் பல வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன. இந்த விபத்துகளின் காரணமாக துபாயின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதித்தது.

அபுதாபி செல்லும் வழியில் சிட்டி செண்டர் மிர்திப் அருகே ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதின. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல, அபுதாபிக்குச் செல்லும் வழியில் ஷேக் சயீத் சாலையில் உம் சகேம் மேம்பாலத்திற்கு அருகே நடந்த மற்றொரு விபத்திலும் பல வாகனங்கள் மோதி சேதமடைந்தன.

காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனவோட்டிகள் கவனமுடனும் போக்குவரத்து விதிமுறைகளின்படியும் வாகனங்களை இயக்குமாறு துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.